The essence of art lives in everyone’s heart. An artist is someone who ignites that dormant spirit of art within others. Ananda Perumal paved path for the participants—not only to create coconut shell crafts, but also to look deep within themselves. His journey was truly a guiding light for everyone.
“The very place where we sat and conducted the workshop was once barren land. Like a seed working silently beneath the soil, the land of Cuckoo emerged through the deep sacrifices of many people” recalled Ananda Perumal. Sivaraj Anna remembered the words of his mentor, Sundara Ramasamy “ Right now, I am floating.” Likewise, the land of Cuckoo is floating today through meaningful actions.
Over the two days, Anand Perumal not only taught coconut shell craft but his words continue to echo in the hearts of all the participants, “art must be viewed through the lens of creation. Only then can we improvise and flow.”
Through art, he has created ripples of change in the lives of tobacco workers in a remote village in the Tirunelveli district. Art must be taught by showing how to do and what to do—then it naturally flows from the creator’s heart. A sustainable life is one in which we can create what we need within our own village, improving livelihoods through art. Anand Perumal not only ignited creative expressions in the participants but also showed them how to become a guiding light for one another. He shared a powerful insight that there is a profound difference between simplicity and poverty. Through art, we can bring simplicity into people’s lives by providing economic stability.
Above all, what the participants learned was to surrender themselves to the art before us.
படைப்பு மனம் கொண்டவர்களாக எல்லோரும் மாறி விடமுடியுமா?
எல்லோருக்கும் கலை படைப்பு சாத்தியமா? எல்லாம் செயல் கூடும் என்பதே பதில்.
கடந்த சனி, ஞாயிற்று கிழமைகளில் குக்கூ காட்டுப்பள்ளியில் நடைபெற்றது தேங்காய் ஓடு கைவினை பயிற்சி வகுப்பு. வெவ்வேறு சூழல்களில் இருந்து வந்திருந்த குடும்பங்கள், இளம் மனங்கள், கிராமத்து பிள்ளைகள் எல்லோரும் மரத்தடியில் கூடி எளிய பிரார்த்தனையுடன் துவங்கினோம். நம்பிக்கை மேல் நம்பிக்கை இழக்காதே என்ற மிர்தாதின் வரிகளுக்கு சாட்சியாக இருக்கும் சிவராஜ் அண்ணாவும் தமிழ்இசை ஆசிரியர் ‘வனக்குயில்’ முனுசாமி அண்ணாவும் வகுப்பினை துவக்கி பேசினார்கள். கடினமான தேங்காய் ஓடு காலத்தின் கருணையினால் அத்தனை வளமை கொண்டதாக மாறி உள்ளது, ஆசிரியர். ஆனந்த பெருமாள் அவர்களுக்கே இந்த வரிகள் பொருந்தும், வகுப்பு ஆரம்பித்த ஒரே மணி நேரத்தில் எல்லோரும் ஓர் உடல் போல செயல் பட துவங்கி விட்டார்கள்.
ஒரு எளிய தேங்காய் சிரட்டை இத்தனை வடிவம் எடுக்குமா, இதெல்லாம் நமக்கு சாத்தியமா என்ற கேள்வியெல்லாம் கரைந்து மெல்ல மெல்ல சிரட்டையை வெட்டி எடுத்தார்கள். ஒரு இதயத்தை கையில் ஏந்தியது போல அத்தனை சிரத்தையுடன் அந்த ஓட்டினை வடிவமைக்க ஆரம்பித்தார்கள். சிறிய ஆனால் மிகுந்த நேர்த்தி கொண்ட கருவிகளை பயன்படுத்த சொல்லிக்கொடுத்தார்,மீண்டும் மீண்டும் அந்த கருவியை முழுமையாக கையாள பூரண சரணாகதி ஒன்றே வழி என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தூசியும் புகையும் கிளம்ப தங்கள் மனத்துக்கு மிக பிடித்த வடிவங்களை செய்ய துவங்கினார், குழுவாக இணைந்து செயலாற்றியதில் மூத்த மனங்களின் பொறுமையினை இளம் மனங்களின் படைப்பு திறன் எல்லாம் ஒன்று கூட மாலை கவிழ்ந்தது.
எப்போதும் தன்னுடன் குறைந்தது ஒரு இளைஞரையாவது அழைத்து கொண்டு வந்து அவனுக்கு இந்த புதிய வாய்ப்பை அல்லது சூழலை உருவாக்கி அளிப்பார் ,இந்த முறை மேடை அலங்காரத்தை முதன்மை பணியாக செய்பவர் ரஞ்சித் ,அதே நேரத்தில் தென்னை ஓலைகளில் வித விதமான பொருட்களை செய்து அசத்தினார். மிகுந்த பொறுமையுடன் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தார். மறுநாள் ஆவாரங்குட்டை பிள்ளைகள் இருபது பேர் உடன் இருக்க வகுப்பு துவங்கியது, புலக்கடையில் கவனிப்பாரற்று கிடக்கும் சிரட்டைகளுக்கு அன்று நிறைய மரியாதை கிடைத்தது.
ஒவ்வொரு வகுப்பிலும் குழந்தைகளை எப்படி இணைத்து கொள்வது என்பதில்தான் மிகுந்த சிரமும் மெனக்கெடலும் இருக்கும்,ஆனால் ஆனந்த பெருமாள் அண்ணா தலை கீழாக மாற்றினார்,எப்போதும் பெரியவர்கள் செய்வதை சிறுவர் கேட்டு நடக்க வேண்டியது வரும், இம்முறை பிள்ளைகள் ஆசைப்பட்டதை பெரியவர்களை செய்ய வைத்து வகுப்பினை துவங்கினார். உரையாடல் பிராரதனமாக இருந்தது இந்த வகுப்பில், மீண்டும் உங்களுக்கு நான் கலையை சொல்லிக்கொடுக்க வரவில்லை அப்படி சொல்லிக்கொடுக்கவும் முடியாது, நீங்கள் கண்டடைய ஒரு சூழல் இருக்கிறது அதை மட்டுமே நான் உங்களுக்கு அளிக்க முடியும் என்றார்.
தேங்காய் ஓடு யானையாகவும், டைனோசர் குட்டியாகவும், புழுவாகவும் உயிர் பெற துவங்கியது. தென்னை ஓலை கொண்டு பிள்ளைகளே கைக்கடிகாரம், காந்தி கண்ணாடி எல்லாம் செய்ய துவங்கியிருந்தார்கள். மதிய உணவிற்கு பின் நம்மாழ்வார் அய்யா எங்களுடன் பேச ஆரம்பித்தார் சரிதானுங்களா அய்யா என்று, உண்மைதான் ரஞ்சித் தம்பி அப்படியே அய்யாவின் குரலில் இயற்கை விவசாயத்தின் மகிமை சொல்ல சொல்ல கண்களில் நீர் கசிந்தது.
சிரட்டையில்
பிறை நிலாக்களும்,சூரியனும்,எழுத்து வடிவங்களும் செய்து மாலையாக அணிந்து கொண்டார்கள். கலைப்படைப்பு மட்டுமல்லாமல் பயன்பாட்டு பொருட்களும் செய்திருந்தனர்.கலந்து கொண்ட அத்தனை பங்கேற்பாளர்களும் ஒரு படைப்பை நிகழ்த்தி மலர்ந்த முகத்துடன் விடை பெற்றனர். புளியானூர், ஆவாரங்குட்டை பிள்ளைகள் இளைஞர்கள் எல்லோரும் இந்த வகுப்பில் பூரணமாக பங்கேற்றது, வந்திருந்த பெரு நகரத்து மக்களும் அவர்களும் கூட இந்த சிரட்டை ஓட்டின் மகத்துவம் அறிந்து கொண்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது. சிவராஜ் அண்ணா மீண்டும் மீண்டும் சொல்லும் ஒரு நல்லாசிரியரின் இருப்பு போதும் அத்தனை சாத்தியங்களையும் அது நிகழ்த்தும் என்று,மேலும் நம்மாழ்வார் அய்யா நினைவு மேலிட பிரிய மனமில்லாமல் எல்லோரும் விடை பெற்று சென்றார்கள்..
Photographs: Arwin
