விதைநாற்று வளர்ப்பகம் திறப்பு..

விதைநாற்று வளர்ப்பகம் திறப்பு / நம்பிக்கையின் நாள் குக்கூ காட்டுப்பள்ளி ஒருவன் அபகரிப்பதை தடுக்க இரண்டு வழிகள்தான் இருக்கிறது. ஒன்று பதுக்குவது, இன்னொன்று பரவலாக்குவது. நமக்கான அழைப்பு இரண்டாவது... ‘பரவலாக்குவது’ – பீட்டர் அண்ணன் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு உள்ளூற்றும் வார்த்தைகள் இது. ஒற்றைத்தலைவலிக்கு மருந்தாக பிய்த்து நெற்றியில் ஒட்டிக்கொள்ளும் வெற்றிலை முதல் புற்றுநோய்க்கட்டிளின் உட்கருவைத் தாக்கியழிக்கும் கனிச்சாறு வரை அத்தனை குணமாக்குதலையும் ஒரு காடுதான் இன்றுவரை நிகழ்த்திவருகிறது. எல்லாவித தழைகளையும் தின்கிற ஆடுமாடு உள்ளிட்ட கால்நடைகளின் […]