குக்கூ கற்றல் வட்டத்தின் அடுத்த வருடத்திற்கான பயணம்…

மாலை இருள் இருள் கவிய கவிய குழந்தைகளும் பெற்றோர்களும் வந்து சேர்ந்து கொண்டே இருந்தனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு நிறைய குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ளும் நிகழ்வு,ஒவ்வொரு முறையும் நிகழ்வுக்கான பதட்டம் உச்சபட்ச அளவிலேயே இருக்கும். பெற்றோர்களும்,குழந்தைகளும் ஏதோ ஒரு தனித்தீவிற்கு வந்ததை போல உணர்ந்திருப்பனர் என்றே தோன்றியது.அந்த விரிந்த வெளியில் வெளிச்சம் அங்கும் இங்குமாய் சிறிய புள்ளிகள் போல இருந்த குடிலினுள் இருந்து வெக்கை தாங்காமல் மக்கள் வெட்ட வெளியில் வந்து படுத்து தூங்க ஆரம்பித்தனர். […]